Thursday, April 4

வெலிகமயில் தோல்வியில் முடிவடைந்த பொதுபல சேனாவின் கூட்டம்


பொது பல சேனாவின் நாடாக கூட்டம் வெலிகமையில் 2 மணியளவில் ஆரம்பமாகும் என கூறப்பட்டாலும் 3.40 மணியளவில் ஆரம்பமானது கூட்டத்தில் கலந்துகொள்ளவென 150 பேர் அளவிலேயே காணப்பட்ததாக அங்கிருந்து தகவல் கிடைத்தன கூட்டம் பிக்குமார் 20 பேர் மாத்திரமே காண முடிந்தது. நடைபெற்ற குறிப்பிட்ட இடத்துக்கு மட்டுமே ஒலிவாங்கி போடப்பட்டிருந்தமை யும் குறிப்பிடத்தக்கது 
முஸ்லிம்கள் பலரும் இக்கூட்டத்தை காண சென்றிருந்ததாக தகவல் கிடைத்தது . இக்கூட்டம் நடாத்த வெலிகமை சிங்கள மக்களே எதிர்ப்பு தெரிவித்திருக்கிரார்கள் என்பதை அங்கு உரையாற்றிய வெலிகம பொது பல ஏற்பாட்டாளர்களின் கருத்துக்களில் இருந்து அறியமுடிந்தது
அவர் கூறுகையில்,
அதாவது இக்கூட்டத்தை நடாத்தி சிங்கள முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தவேண்டாம் என வெலிகம சிங்கள மக்கள் தமக்கு கூறியதாகவும் அவர் கூறினார். மேலும் எல்லா மதத்தவர்களும் வெலிகமயில் சமாதானமாக வாழ்ந்து வருவதாகவும் வீண் பிரட்சினைகளை ஏற்படுத்த வேண்டாம் என வெலிகம சிங்கள மக்கள் தமக்கு கூறியதாக அவர் கூறினார். 
மேலும் இக்கூட்டத்தை நடாத்த பணம் வசூலிக்க வெலிகம வாழும் தனவந்த சிங்ளகவர்களிடத்தில் சென்றபோது அவர்களில் ஒருசிலரே இதற்கு பண உதவி வளங்கியதகவும் கூறினார்.
மேலும் இவர்கள் வெலிகமயில் உள்ள விகாரைகளுக்கு சென்றுள்ளனர் இக்கூட்டம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக பல விகாரைகளில் எதிர்ப்பு காட்டியதாக அவர் கூறினார்.
வெலிகம யில் அதிகமான சிங்கள மக்கள் மத மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதற்கு இனிமேல் இடம் அளிக்க கூடாது எனவும் ஜிஹாதிய அமைப்புக்கள் தடை செய்யப்படவேண்டும் எனவும் இன்னும் பல்வேறு முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களையும் கூறினார்.

No comments:

Post a Comment