Thursday, April 4

பௌத்த தேரர்களின் செயற்பாடுகளை அடக்குவதற்கு சட்டமூலமா? வாசுதேவாவுக்கு எச்சரிக்கிறார் ரஜவத்தேவப்பதேரர்

பௌத்த தேரர்களின் செயற்பாடுகளை அடக்குவதற்கு சட்டமூலமா? வாசுதேவாவுக்கு எச்சரிக்கிறார் ரஜவத்தேவப்பதேரர்

மாற்று மதங்களுக்கு எதிரான சட்டமூலத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்த போது, அமைதியாக இருந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, பௌத்த தேரர்களின் செயற்பாடுகளை அடக்குவதற்காக சட்டமூலம் ஒன்றை கொண்டு வர தயாராகி வருவது குறித்து தாம் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து கொள்வதாக தேசிய சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
உரிய இனமற்ற, மத மற்ற நபர்களே இந்த இவ்வாறான சட்டமூலத்தை கொண்டு வருவதற்கு முயற்சித்து வருகின்றனர் என தேசிய சங்க சம்மேளனத்தின் தலைவர் ரஜவத்தே வப்ப தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு, இனத்திற்கும் பாதிப்புகள் ஏற்பட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் தேசப்பற்றுள்ள பிக்குமார் முன்வந்து குரல் கொடுத்தனர். ஏனைய மதத்தினர், இனத்தினரின் அடிப்படைவாத குழுவினர் பேசுவதும், செய்வதும் வாசுதேவ போன்றவர்களின் கண்களுக்கு தெரியவதில்லை. 

குருகல பௌத்த ஆலயம் அமைந்துள்ள பிரதேசம் அவர்களுக்கு உரியது என அடிப்படைவாதிகள் கூறுகின்றனர். அந்த பிரதேசத்தை சர்வமத பிரதேசமாக அறிவிக்குமாறும் கோருகின்றனர். சர்வ மத பிரதேசங்கள் காரணமாகவே நாட்டில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இவற்றை சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களே செய்து வருகின்றன. 
தற்போதுள்ள நிலைமை குறித்து பேசும் அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரவேண்டும். உண்மையில், மாநாயக்க தேரர்கள் உட்பட கற்றிந்தவர்கள் இது குறித்து ஒற்றுமையான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர் எனவும் வப்ப தேரர் கூறியுள்ளார். 

No comments:

Post a Comment