Thursday, April 4

ரூ.12 கோடி பெறுமதியான சிகரெட் சுங்கத்தினால் கைப்பற்றப்பட்டது




சுமார் 12 கோடி ரூபா பெறுமதியான 'டொப் மவுண்டன்' ரக சிகரெட்டுகள் அடங்கிய கண்டேனர் ரக வாகனமொன்று இலங்கை சுங்கப் பிரிவு அதிகாரிகள் இன்று கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, புத்தாண்டுக் கால விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்ட கழிவுகள் அடங்கிய நெத்தலிக் கருவாடுகள் அடங்கிய கண்டேனர் ரக வாகனம் ஒன்றும் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. டுபாயிலிருந்தே இந்த நெத்தலிக் கருவாடுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட சிகரெட்டுக்களையும் நெத்தலிக் கருவாட்டினையும் சுங்கப் பிரிவு அதிகாரிகளையும் படங்களில் காணலாம்.


No comments:

Post a Comment