Thursday, April 4

மின்னஞ்சல் செய்தி குறித்து பொதுபலசேனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு

20130403-072719.jpg
பொதுபலசேனா அமைப்பின் உத்தியோகபூர்வ அறிவித்தல் என்ற அடிப்படையில் வெளியிடப்பட்ட மின்னஞ்சல் செய்தி ஒன்று தொடர்பில் குற்றபுலனாய்வுத் தரப்பிடம் விசாரணை நடத்தக்கோரி இருப்பதாக பொதுபலசேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
தமது அமைப்புக்கு ஜனாதிபதியின் ஆதரவு இருப்பதாகவும், பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தமக்கு பின்புலமாக இருப்பதாகவும் இந்த மின்னஞ்சலில் பொதுபலசேனா அமைப்பு தெரிவித்தது.
அத்துடன் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பொதுபலசேனா அமைப்பு மேற்கொள்ளவுள்ள செயற்பாடுகள் தொடர்பிலும் தெரிவிக்கப்படடிருந்தது.
எனினும் இதனை தாங்கள் அனுப்பவில்லை என்றும் தமது அமைப்பின் நற்பெயரை கலங்கடிக்கும் விதத்தில் தற்போது பல்வேறு செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

No comments:

Post a Comment