Saturday, April 27

பொது பல சேனாவின் பின்னால் ஐ.தே.க.உறுப்பினர்?: சிங்கள ஊடகம் தகவல்

 
பொது பல சேனா அமைப்பின் பின்னால் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஒருவர் செயற்படுவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
குறித்த உறுப்பினர் அரசோடு இணைந்துகொண்டுள்ளதாகவும் எனினும் அவருக்கு இதுவரை எவ்வித அமைச்சுப்பதவியும் வழங்கப்படவில்லை எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பொது பல சேனாவின் பின்னால்? என தலைப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள குறித்த செய்தியில் குறித்த அரசியல் வாதியின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
 
எவ்வாறாயினும் கடந்த நாட்களில் ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்டோர் பொது பல சேனாவின் பின்னணியில் செயற்படுவதாக பரவலாக பேசப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment