இலங்கை
ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் இரவு ஒரு மணி நேர
நிகழ்ச்சிகள் அரசியல் நோக்கத்திலான நிகழ்ச்சிகளாக மாற்றப்பட்டிருப்பது
குறித்த முஸ்லிம் சமூக மட்டத்தில் பலத்த அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் சேவை ஆரம்பிக்கப்பட்டு 60 வருட காலத்துக்குள் முஸ்லிம் கலாசார நிகழ்ச்சிகளே இந்த நேரத்தில் ஒலிபரப்பப்பட்டு வந்தது.
அண்மைக் காலமாக ஒலிபரப்பப்படும்
நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டு தொலைபேசியூடாக நேர்காணல்களும் விமர்சனங்களுமே
ஒலிபரப்பப்பட்டு வரப்படுகின்றன.
தர்ஜமதுல் குர்ஆனில் நிகழ்ச்சி
ஆரம்பிக்கப்பட்டு ஸலவாத்துடன் நிகழ்ச்சி முடிகின்றபோது அதற்குட்பட்ட
நேரத்தில் அரசியலை மையமாகக் கொண்ட நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுவதாக நேயர்கள்
தெரிவிக்கின்றனர்.
வானொலி முஸ்லிம் சேவை தடம்புரண்டு செல்வது
பற்றி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா
போரம் போன்ற அமைப்புக்களுக்கும் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவத்துக்கு பலர்
முறைப்பாடு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment