அச்சகமொன்றை
நடத்திவந்த முஸ்லிம் ஒருவரது வீட்டுக்கு பிரவேசித்து அவரைத் தாக்கிவிட்டு
பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தையும் பணத்தையும் கொல்லையடித்துச் சென்ற
சம்பவம் பொலரலஸ்கமுவில் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
தம்மை இரகசியப் பொலிஸார் எனக்
கூறிக்கொண்டு வந்த மூவரே இக்கைங்கரியத்தை செய்துவிட்டு
தப்பிச்சென்றுள்ளனர். பதுளையை பிறப்பிடமாகக் கொண்ட மேற்படி அசக்க
உரிமையாளர் பொரலஸ்கமுவையில் நீண்டகாலமாக வசித்துவருகிறார். இவரது வீடும்
அச்சகமும் ஒரே இடத்திலேயே அமைந்துள்ளது.
சம்பவதினம் அச்சகத்தில் புதிய இயந்திரம்
ஒன்றைக் கொண்டுவந்து பொருத்திவிட்டுச் செல்வதற்குள் சிறிய நுழைவாயில் ஊடாக
வீட்டுக்குள் பிரவேசித்து துப்பாக்கியால் வீட்டு உரிமையாளரின் தலையில்
தாக்கியதும் அவர் மயக்கமுற்ற நிலையில் வீட்டில் இருக்கின்ற பெண்களை
அச்சுறுத்தி சுமார் 30 பவுண் பெறுமதியான தங்கத்தையும் 8 ஆயிரம் ரூபா
பணத்தையும் கொள்யைடித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
வீட்டின் மேல்மாடியில் பெண்கள்
அணிந்திருந்த ஆபரணங்களை இவர்கள் கழற்றி எடுத்துள்ளனர். வீட்டிலுள்ள 5
வயதுச் சிறுவன் கூக்குரலிட்டபோது மடக்கிவிட்டு கொள்ளையடித்துச்
சென்றுள்ளனர். இந்த வீடும் அச்சகமும் உள்ளே எது நடந்தாலும் வெளியில்
தெரியாதவண்ணம் மதிலும், கேற்றும் போடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நடைபெற்ற பின்னரே
அயலவர்களுக்கு விடயம் தெரியவந்துள்ளது. உடனடியாக அச்சக உரிமையாளர்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 6 தையல்களுடன் சிகிச்சைபெற்று
வந்துள்ளார். இரகசிப் பொலிஸார் எனக்கூறி வந்தவர்கள் பதுளையிலிருந்து இங்கு
வந்து எப்படி வியாபாரம் செய்யலாம், உமக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது
என்றெல்லாம் கேள்விகேட்டு இனவாத ரீதியில் பேசி உரிமையாரை
அச்சுறுத்தியுள்ளனர்.
பொரலஸ்கமுவ பொலிஸார் இதுகுறித்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment