ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம்
நாடுகள், பெப்பிலியான நகர வர்த்தக நிலையம் தாக்குதல் தொடர்பில் அறிந்ததன்
பின்னர் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தமை தொடர்பில் வருந்துவர் என ஐக்கிய
தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்
தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று 01-03-2013 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முஸ்லிம் மக்களுக்கு எதிராக கடந்த சில நாட்களுக்குள் 40 சம்பவங்கள்
பதிவாகியுள்ளது. எனினும் அரசு இது தொடர்பில் பொருட்படுத்திக் கொள்ளவில்லை
என அவர் சுட்டிக் காட்டினார்.
பொது பலசேனா அமைப்பிற்கும் அரசிற்கும் தொடர்பில்லை என அரசு குறிப்பிட்டு
வருகிறது. எனினும் பொது பலசேனாவின் அலுவலக திறப்பு விழாவிற்கு பாதுகாப்புச்
செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ் சென்றிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் உள்ளது விசித்திரமான பொலிஸ் எனவும் பெப்பிலியான நகர வர்த்தக
நிலையம் தாக்குதல் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்
ஹக்கீமும் பொருட்படுத்தாது இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த தாக்குதலின் போது ரவூப் ஹக்கீம் நித்திரையில் இருந்ததாக தெரிவித்துள்ளார். அமைச்சர் அன்றுதான் நித்திரை கொண்டிருப்பார்.
No comments:
Post a Comment