பங்களாதேசில் ஹெபஜாட்-இ-இஸ்லாம், ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் இஸ்லாமிய
அமைப்புகள் சார்பில் தலைநகர் டாக்காவில் சனிக்கிழமை (06.04.2013) மாபெறும்
பேரணி ஒன்று நடத்தப்பட்டது. அண்மைக் காலமாக அரசுக்கு ஆதரவாக
ஆரம்பிக்கப்பட்ட அமைப்பொன்றால் இஸ்லாம் மதத்தையும், முஹம்மது நபி(ஸல்)
அவர்களையும் இழிவுபடுத்தி பேசபட்டும் வலைத்தளங்களில் எழுதுபட்டும்
வருவதானால் அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு வழிவகை செய்யும் மதச்சட்டத்தை
அறிமுகம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த
போராட்டம் நடாத்தப்பட்டது.
இந்த பேரணியில், நாட்டின் பல பாகங்களிலிருந்தும் இருந்து வந்த பல்லாயிரக்
கணக்கானோர் கலந்துகொண்டனர். அவர்கள் மதச்சட்டத்தை வலியுறுத்தியும்,
மதத்திற்கு எதிராக எழுதும் நாத்திக வாதிகளை தண்டிக்க கோரியும் கோஷம்
எழுப்பினர்.
No comments:
Post a Comment