2012 க.பொ.த சாதாரணதரப் பரீட் சையில் முதல் முறையாகத் தோற்றிய 3,86,426
மாணவர்களில் 2,51,000 மாணவர்கள் (64.74 வீத மானோர்) க.பொ.த உயர் தரத்தில்
கல்வி கற்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்
தெரிவித்துள்ளது. 11,100 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் சித்திபெறவில்லை.
இது 4.13 வீதமாகும். 2011ல் 60.84 வீதமானோர் இப்பரீட்சையில் தோற்றி
யிருந்தனர். எனினும், இந்த எண்ணிக்கை 64.74 வீதமாக அதிகரித்திருப்பதாக
பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
சகல பாடங்களுக்கும் “ஏ” சித்தி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 4,509 ஆகும்,
இது 1.6 வீதமாகும். 3900 பேர் எட்டுப் பாடங்களில் “ஏ” சித்திகளைப்
பெற்றுள்ளனர் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கணித பாடத்தில் 55.35 வீதமானோர் சித்தியடைந்துள்ளனர். விஞ்ஞான பாடத்தில்
68.26 வீதமானோரும், ஆங்கில பாடத்தில் 47.78
வீதமானோரும்,சித்தியடைந்துள்ளனர்.
கொழும்பு, குருநாகல் மற்றும் காலி மாவட்டங்களில் க.பொ.த சாதாரணதரப்
பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 64 வீதத்துக்கும் அதிகமானவர்கள்
சித்தியடைந்துள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 73.2 வீதமானவர்களும்,
குருநாகல் மாவட்டத்தில் 68.3 வீதமானவர்களும், காலி மாவட்டத்தில் 68.19
வீதமானவர்களும் சித்தியடைந்துள்ளனர்.
பரீட்சைகள் திணைக்களம் மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தால் இணைந்து
முன்னெடுக்கப்பட்ட விசேடமான கல்விச் செயற்பாடுகள் காரணமாகவே இம்முறை க.பொ.த
சாதாரணதரப் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களின் எண்ணிக்கை
அதிகரிப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளது என பரீட்சைகள் திணைக்களம்
தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment