பொதுபல
சேனாவினர் தற்போது தோல்வி அடைய தொடங்கியுள்ள நிலையில் வடக்கிலே முஸ்லிம்
அமைச்சர்கள் காணி சுவீகரிக்கின்றார்கள் என்ற ஒரு விசமத்தனமான பொய்யான
கருத்தை பிரச்சாரம் செய்து வருகின்றனர் என ஊக்குவிப்பு உற்பத்தி திறன் விருத்தி அமைச்சர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார் .
மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற பெண்
தொழில் முயற்சியாளர்களின் கண்காட்சியினை ஆரம்பித்து வைத்து
உரையாற்றுகையிலேயே அமைச்சர் பசீர் சேகுதாவூத் மேற்கண்டவாறு
தெரிவித்துள்ளார்.இங்கு உரையாற்றியுள்ள அமைச்சர் பசீர் நாட்டில் இன்று
யுதத்திற்கு பின்னரான காலப்பகுதியில் புதிய இலங்கையை உருவாக்க இன்று
முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன.
இந்த புதிய முயற்சியில் நாம் அனைவரும்
ஒன்று பட்டு செயற்பட வேண்டும். சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற
பிரிவினை வாத மதவாத சிந்தனைகளை தூக்கி யெறிந்து ஒன்று பட்ட சமூகத்தை
உருவாக்க நாம் பாடுபட வேண்டும்.
பொதுபல சேனா எனும் இந்த அமைப்பு இன்று
தோல்வியை நோக்கி நகரத் தொடங்கியுள்ள நிலையில் வேறு வழியில்லாமல் முஸ்லிம்
அமைச்சர்கள் வடக்கிலே காணிகளை சுவீகரிக்கின்றனர் என்ற ஒரு பொய்யான கருத்தை
கூறியுள்ளனர்.என்று தெரிவித்துள்ளார் .
No comments:
Post a Comment