Sunday, April 7

அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு முஸ்லிம் சமூகத்திடம் இருந்து SLMCக்கு அழுத்தம் -ஹசன் அலி


அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு SLMCக்கு அழுத்தம் - அரசாங்கத்தில் இருந்து விலகும்? ஆனால் விலகாது –

 
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட ஹலால் தொடர்பான அமைச்சரவை உப குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருப்பதா இல்லையா என்ற இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
இந்த உப குழுவின் அறிக்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட உள்ளதாகவும் குறித்த அறிக்கையில் அடிப்படை திட்டங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிய முடிகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
இது சம்பந்தமாக அரசாங்கத் தரப்புடன் விரிவாக கலந்துரையாடியதாகவும் எனினும் எவ்விதமான உரிய முடிவுகளுக்கு வரமுடியாமல் போனமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம் எனவும் ஹசன் அலி குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு, முஸ்லிம் காங்கிரஸூக்கு முஸ்லிம் சமூகத்திடம் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுவது தொடர்பில் பதிலளித்துள்ள அவர், அவ்வாறான சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இந்த பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ள முடியும் என எதிர்பார்த்துள்ளதாகவும் செயலாளர் நாயகம் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment