ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர் பீடத்தை அவசரமாக கூட்டுமாறு
முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்திருப்பதாக
ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் அடுத்த அரசியல் உயர் பீட கூட்டம் இம்மாதம் 27ம் திகதி நடத்தப்படவிருக்கின்ற நிலையலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக இந்த கூட்டத்தை கூட்டுமாறு முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் கோரி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்துடன் தொடர்ந்து இணைந்திருப்பதா? அல்லது அதில் இருந்து இடை விலகுவதாக என்பது தொடர்பில் இதன் போது விவாதிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
எவ்வாறாயினும் இது குறித்து இன்னும் எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என்று கட்சியின் பொது செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments:
Post a Comment