முன்னாள்
ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, எதிர்க்கட்சித் தலைவர் ரணில்
விக்கிரமசிங்க ஆகியோர் ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் அமைந்துள்ள முன்னாள்
ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் இல்லத்திலேயே இந்த ரகசிய
சந்திப்பு இடம்பெற்றதாகவும் அச்சந்திப்பில் சுமார் இரண்டு
மணித்தியாலங்களுக்கு அதிகமாக இருவரும் பல்வேறு அரசியல் விடயங்கள் தொடர்பாக
கலந்தாலோசித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது அடுத்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில் மஹிந்த
அரசைத் தோற்கடிப்பதற்கான வழி வகைகள் குறித்து இருவரும் மனம் விட்டு
பேசியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக அரசாங்கத்தில் அதிருப்தியுற்றுள்ள சுதந்திரக் கட்சி
முக்கியஸ்தர்கள், இடது சாரிகள் மற்றும் தமிழ் முஸ்லிம் தலைவர்களையும்
உள்ளடக்கி தம்மிருவர் தலைமையில் பொதுக் கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்தும்
ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இவ்விடயம் குறித்து தொடர்ந்தும் சந்திப்புகளை நடத்தி ஆராய்வது என இருவரும் இணக்கம் கண்டுள்ளனர் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment