Monday, April 1

காத்தான்குடியில் பெண்கள் தொழுவதற்கு தனியான பள்ளிவாயல் திறப்பு


women-masjid
முஸ்லிம் பெண்கள் வசதி கருதி பெண்களுக்கும் வழுவூட்டலுக்குமான அமைப்பின் தலைவியும் ஸ்ரீ.ல.மு.கா கட்சியின் காத்தான்குடி நகர சபை முதல் பெண் உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்சாவின் வேண்டுகோளின் பேரில் ஸ்ரீ.ல.மு.கா கட்சியின் தவிசாளரும், உற்பத்தித் திறன் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சருமான பஸீர் ஸேகுதாவூத்தின் முயற்சியின் பயனாக திறந்து வைக்கப்பட்டது.

இப்பள்ளிவாசலை காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் முதல்வர் ஸெஹூல் பலாஹ் அப்துல்லாஹ் றஹ்மானி மற்றும் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி மற்றும் உலமாக்களினால் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஸூபஸ் தொழுகையுடன் வைபவரீதியாக திறந்து வைத்தனர்.

இப்பள்ளிவாசல் சவூதி அரேபியோவின் நன்கொடையாளர் ஒருவர், சுமார் 21 இலட்சம் ரூபாய் செலவில் மட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள மௌலானா கபுறடி பள்ளிவாயலுக்குப் பின்னால் தனியாக பெண்கள் தொழுவதற்கு மஸ்ஜிதுஸ் ஸய்யிதா பத்ரிய்யா அஹ்மட் என்ற பெயரில்  பள்ளிவாயல் ஒன்று கடந்த 2013.08.14 ஆம் திகதி பெண்களுக்கும் வழுவூட்டலுக்குமான அமைப்பின் தலைவி சல்மா அமீர் ஹம்சா மற்றும் உலமாக்களினால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹியினால் விஸேட பயான் ஒன்றும் நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் முதல்வர் ஸெஹூல் பலாஹ் அப்துல்லாஹ் றஹ்மானி மற்றும் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி மற்றும் நீதி அமைச்சரின் இணைப்பாளர் அமீர் ஹம்ஸா, நஸீலா ஹாட்வெயார் உரிமையாளரும் பள்ளிவாயல் நிர்வாக சபைத் தலைவருமான ஐ.எல்.அக்பர், காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி அப்துல் ஜவாத் மற்றும் மட்டக்களப்பு மெக்ஸல் ஹாட்வெயார் உரிமையாளர் அஹமட் லெவ்வை மீராஸாகிபு, டமாஸ் கடை உரிமையாளர் எம்.சி.எம்.நஜீம் ஜேபி,மற்றும் உலமாக்கள், பள்ளிவாயல் நிருவாக சபை உறுப்பினர்கள், பெண்களுக்கும் வழுவூட்டலுக்குமான அமைப்பின் தலைவியும் ஸ்ரீ.ல.மு.கா கட்சியின் காத்தான்குடி நகர சபை முதல் பெண் உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்சா மற்றும் ஊர் பிரமுகர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
மஸ்ஜிதுஸ் ஸய்யிதா பத்ரிய்யா அஹ்மட் என்ற பெயரில் இன்று திறந்துவைக்கப்பட்ட இப்பள்ளிவாயலுக்கான நிதி கடந்த வருடம் ஹிஜ்ரி -1434 ரமலான் மாதம் ஒதுக்கப்பட்டு இன்று கையளிக்கப்பட்டது.
இன்று திறந்து வைக்கப்பட்ட இப்பள்ளிவாயல் இலங்கையில் நாலா பாகங்களிலும் இருந்து காத்தான்குடிக்கு வருகை தரும் முஸ்லிம் பிரயாணிகளின் வசதி கருதியும், பெண்கள் தனியாக தொழுவதற்குமாக மாத்திரம் திறந்துவைக்கப்பட்ட பள்ளிவாயல் என்பது குறிப்பிடத்தக்கது.
women-masjid1
women-masjid2
women-masjid4
women-masjid3

No comments:

Post a Comment