Monday, April 1

முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு ஜனாதிபதி உத்தரவாதம் : பிரதியமைச்சர் காதர்

 
முஸ்லிம்களுக்கும் ,முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்கப்படுமெனவும் அதற்கான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி தன்னிடம் தெரிவித்ததாக சுற்றாடல் பாதுகாப்பு பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம்.ஏ.காதர் தெரிவித்தார்.
 
தொடர்ந்தும் அவர் முஸ்லிம்களின் சமகால பிரச்சினைகள் தொடர்பில்  கருத்து தெரிவிக்கையில் ,
 
பெபிலியான பெஷன் பக் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தராதரம் பாராது தகுந்த தண்டனை வழங்கப்படுமென ஜனாதிபதி உறுதியளித்திருக்கும் நிலையில் இச்சம்பவத்தை விமர்சித்துக்கொண்டிருப்பதில் பயனில்லை.
 
முஸ்லிம் அரசியல் தலைவர்கள்  சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கான தீர்வு கள் பற்றி கலந்தாலோசிக்கும் போது அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளையும் இணைத்துக்கொள்ளவேண்டும்.அவ்வாறு இணைத்துக்கொண்டாலே பயனுள்ள தீர்க்கமான முடிவுகளை எட்டமுடியும் என்றார்.

No comments:

Post a Comment