
இந்நாட்டில் ஏதாவது காவியுடை தரித்தால் எதையும் செய்துவிடலாம் என்கிற
அசிங்கமான கலாசாரம் இருந்து வருகிறது என்பது கணடிக்கத்தக்கது.
வருந்தத்தக்கது. இந்த கலாசாரத்தை தொடர இடமளித்தால் குற்றம் செய்தவர்கள்
யாரும் தப்பிவிடுவதற்கு ஒரு இடமாக இந்நாடு கணிக்கப்பட்டு விடுமென முஸ்லிம்
காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
இலங்கையில் அண்மைக் காலங்களில் நடைபெற்று வரும் சம்பவங்களை பார்க்கும் போது
நாட்டில் சட்டம் பாரபட்சமின்றி பரிபாலிக்கப்படுகிறா என்று எண்ணத்
தோன்றுகிறது என்று நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் பிபிசி, யிடம் தெரிவித்தார்.
இப்படியான நடவடிக்கைகள் மக்களுக்கு சட்டத்தின் மீது இருக்கும் நம்பிக்கையை
போக்க வழி செய்துவிடும் எனவும் அவர் கூறுகிறார். இலங்கையில் காவி உடை
தரித்தால் எதையுமே செய்து விடலாம் என்கிற ஒரு அசிங்கமான கலாச்சாரம் இருந்து
வருகிறது எனவும் கூறும் அவர், அது கண்டிக்கப்பட வேண்டும் எனவும்
தெரிவித்தார்.
குற்றம் செய்தவர்கள் தப்பிப் பிழைத்துக் கொள்வதற்கான ஒரு இடமாக இலங்கை
கணிக்கப்பட்டு சர்வதேச சமூகத்தின் நல்லெண்ணத்தை இழக்க வேண்டிய ஆபத்தும்
வரலாம் எனவும் நாட்டின் நீதியமைச்சரான ரவூப் ஹக்கீம் கூறுகிறார்.
No comments:
Post a Comment