
இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படும் நபர்களை கைது செய்து அவர்களுக்கு
எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் என்.கே.
இளங்கக்கோன் உத்தரவிட்டுள்ளார்.
ஏதேனும் ஓர் இடத்தில் இனக்கலவரம் இடம்பெற்றால் உடனடியாக சென்று நிலைமையை
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமாறு பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை
விடுக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்ட குழுக்களினால் தாக்குதல் நடத்தப்படக் கூடிய சில முக்கிய வர்த்தக
நிலையங்கள் கட்டிடங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என
தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட வகையில் இனங்களுக்கு இடையில் முறுகல் நிலைமையை ஏற்படுத்த சிலர்
முயற்சித்து வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா
அதிபர் அனுர சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment