Tuesday, April 2

எகிப்துக்கும், ஈரானுக்கும் வளருகிறது தொடர்பு – 34 வருடங்களின்பின் விமான சேவை!

எகிப்துக்கும் ஈரானுக்கும் இடையில் 34 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக நேரடி வர்த்தக விமானப் பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எகிப்து வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான எயார் மெம்புஸ் என்ற வர்த்தக விமான 8 ஈரான் நாட்டவர்களுடன் கடந்த சனிக்கிழமை கெய்ரோவில் இருந்து தெஹ்ரானை சென்றடைந்தது. 1979 ஆம் ஆண்டு ஈரானிய புரட்சிக்கு பின்னர் இரு நாட்டு உறவில் சுமுக நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்தே விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


எனினும் கடந்த 2010 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் அரசில் எகிப்து – ஈரானுக்கு இடையிலான வர்த்தக விமான சேவையை ஆரம்பிக்க ஒப்பந்தமானபோதும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஈரான் புரட்சிக்கு பின்னர் ஷா மன்னருக்கு அடைக்கலம் வழங்கியது இஸ்ரேலுடனான எகிப்தின் அமைதி உடன்படிக்கை காரணமாக ஈரான் எகிப்துக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் துண்டிக்கப்பட்டன. எனினும் 2012 ஆம் ஆண்டு மொஹமத் முர்சி எகிப்து ஜனாதிபதியாக தேர்வானதைத் தொடர்ந்து இரு நாட்டு உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது.

No comments:

Post a Comment