Tuesday, April 2

தொழில்நுட்ப கல்லூரி பட்டதாரிகளுக்கு 2 வாரத்தில் நியமனம்: மனோரா பெரேரா



உயர் தொழில்நுட்ப கல்லூரி பட்டதாரிகளுக்கு 2 வாரத்தில் நிரந்தர நியமனம் வழங்கப்படுமென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டதாரிகள் சங்க தலைவர் மனோரா பெரேரா இன்று உறுதியளித்துள்ளார்.

யாழ். மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அமைப்பின் யாழ். மாவட்ட காரியாலயத்தில் இளைஞர் அமைப்பின் ஒருங்கிணைப்புச் செயலாளர் அன்ரனி ரங்க துஷக்ரன் தலைமையில் நேற்று காலை 10 மணிக்கு இக்கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலின் போது, 'கடந்த ஆண்டில் உயர் தொழில் நுட்ப கல்லூரியில் பட்டப்படிப்பினை நிறைவு செய்த உயர் தொழில் நுட்ப கல்லூரி பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படுமென்று உறுதியளித்துள்ளதுடன், பட்டதாரிகள் தொடர்பாக வெளிவரும் வதந்திகளை நம்ப வேண்டாமென்றும்' அவர் கூறினார்.

அதேவேளை, 'பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டு பூர்த்தியடைந்த  பின்னரான காலத்தில் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படுமென்றும், 35 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரிகளும் பட்டதாரி பயிலுனர் ஆட்சேர்ப்பில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும், 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பயிலுனர் நியமனம் வழங்கப்படாது என வெளிவரும் வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாமென்றும்' அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இக்கலந்துரையாடலில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பட்டதாரிகள் சங்க ஊடக பேச்சாளர் பியல் குறுஹே மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டதாரிகள் சங்க ஆசிரிய ஆலோசகர் டாக்டர் வசந்த உட்பட சமாதான நீதிவான் ஜெய்சங்கர் மற்றும் உயர் தொழில் நுட்ப கல்லூரி பட்டதாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment