Wednesday, April 3

'இலங்கை வந்துள்ள அரபு நாட்டவர்களை பயமுறுத்தும் பிரச்சாரங்கள் முறியடிப்பு'

நுவரெலியாவில் ஏப்ரல் மாத வசந்த காலங்களை கழிக்கவென அரபு நாடுகளிலிருந்து இலங்கை வந்துள்ளவர்களை பயமுறுத்தும் வகையில் சிலர் பிரசாரங்களை முன்னெடுத்துள்ள போதும், ஜனாதிபதியின் உறுதிமொழிகளால் அப்போலி பிரசாரங்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்தார்.
நுவரெலியாவில் ஏப்ரல் வசந்த கால விடுமுறையை கழிக்க அரபு நாடுகளில் இருந்து ஏராளமானோர் இலங்கை வந்துள்ளனர். இவர்கள் நுவரெலியா செல்லக்கூடாது. அங்கு முஸ்லிம்கள் சென்றால் தாக்கப்படுவார்கள். குழப்பங்களை உருவாக்கும் என்றெல்லாம் தீய சக்திகள் விஷமப் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிங்கள பெளத்த மக்களினதும் இலங்கையில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களினதும் பாதுகாவலன் நானே என திட்டவட்டமாகக் கூறியுள்ளதால், இப்போலி பிரசாரங்கள் முறியடிக்கப்பட்டு விட்டதாக பாராளுமன்றப் பேரவை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்தார்.
மெதமூலன கிராமத்துக்கு அருகாமையில் உள்ள யக்கஸ்முல்லவில் அஹதிய்யாப் பாடசாலையின் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தில் பேசுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அஸ்வர் எம்.பி.
சமுதாயத்தைக் கூறுபோட்டு குழப்ப நிலையை உருவாக்குவதன் மூலம் சமூக நல்லெண்ணத்துக்கு குந்தகம் விளைவிக்கவே தீய சக்திகள் பாடுபட்டு வருகின்றன. முஸ்லிம்களுக்கு எதிர்ப்பை தெரிவிப்பவர்களின் பின்னணி குறித்து நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.
பெபிலியான சம்பவத்தில் தமக்கு சம்பந்தம் இல்லை என்று பொதுபலசேனா அறிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வாறானால் இதனைச் செய்பவர்கள் யார்? அரசியலில் தூக்கி எறியப்பட்ட, டொலர்களுக்கு தலையாட்டும் கும்பலே தான் இத்தகைய நாசகார முயற்சிகளை மேற்கொள்கின்றது என்றும் தெரிவித்தார்

No comments:

Post a Comment