Wednesday, April 3

இஸ்லாத்தை இழிவுபடுத்தும் இனவாதிகளுக்கு எதிரான முதல் பொது கூட்டம் 6ம் திகதி

அண்மைக்காலமாக இஸ்லாத்திற்கு எதிராக இனவாதிகள் வைக்கும் குற்றச் சாட்டுக்களுக்கு பதில் கொடுக்கும் வகையில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் எதிர்வரும் 06ம் திகதி கொழும்பு கொம்பனி வீதியில் ஒரு மாபெரும் பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த பொதுக்கூட்டத்தில் தவ்ஹீத் ஜமாஅத் உலமாக்களால் பின்வரும் தலைப்புகளில் சொற்பொழிவு ஆற்றவுள்ளனர்.

´முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாப்போம்´ (சிங்கள மொழி மூல உரை) எனும் தலைப்பில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் செயலாளர் அப்துர்ராஸிக், ´வஹாபிசம் தீவிரவாதமா?´ எனும் தலைப்பில் துணைச்செயலாளர் ரஸ்மின், ´சதி வலையில் சிக்குமா முஸ்லிம் சமுதாயம்?´ எனும் தலைப்பில் துணைத்தலைவர் பர்ஸான் ஆகியோர் உரை நிகழ்த்தவுள்ளனர்.

கொழும்பு கொம்பனி வீதி ஹோலி ரோசரி மஹா வித்தியாலயத்துக்கு முன்னால் நடைபெறவுள்ள இந்த பொதுக்கூட்டம் 06.04.2013 அன்று மாலை 6.45 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இஸ்லாத்தை இழிவுபடுத்தும் இனவாதிகளுக்கு எதிரான முதல் பொது கூட்டம் 6ம் திகதி

No comments:

Post a Comment