மிக
முக்கியமான தருணங்களில் பாகிஸ்தான் உதவிகளை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான்
வெளிவிவகாரச் செயலாளர் அப்பாஸ் ஜிலானி இன்றைய தினம் ஜனாதிபதியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் பாகிஸ்தான் தேர்தல்கள்
குறித்தும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. அரசியலில்
பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, யுத்தம் இடம்பெற்ற 2005ம் ஆண்டில்
இலங்கைக்கு விஜயம் செய்ததனை விடவும் தற்போது பாரியளவில் மாற்றங்கள்
ஏற்பட்டுள்ளதாகவும், சமாதானம் நிலவுவதாகவும் ஜிலானி தெரிவித்துள்ளார்.
யுத்த நிறைவு மட்டுமன்றி அபிவிருத்திப்
பணிகளிலும் பாரியளவு மேம்பாடு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத ஒழிப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் அணுகுமுறை வரவேற்கப்பட
வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையுடனான நட்பு வரவேற்கப்பட
வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment