அமெரிக்க உள்ளிட்ட ஆதிக்க சக்திகளின் கடும் பொருளாதார தடைகளையும் கடந்து
ஈரான் பேரரசு, பல்வேறு முன்னேற்றப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.
வடக்கு ஈரானின் "மஷ்அதுல் முகத்தஸ்" நகரிலிருந்து 69 கிலோ மீட்டர்
தொலைவில் அமைந்துள்ள "அர்தாக்" அணையை புதன்கிழமையன்று (03/04) துவக்கி
வைத்து பேசிய ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதி நிஜாத், தடைகளை கடந்து
முன்னேற்றப்பாதையில் ஈரான் பயணித்துக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
அதையடுத்து, உலகின் மிக உயரமான (325 மீட்டர்) காங்கிரீட் அணைக்கட்டும் பணிகளையும் துவக்கி வைத்தார்,அஹ்மதி நிஜாத்.
Hydroelectric power தொழில் நுட்பத்துடன் கட்டப்படும் இந்த அணையின் மூலம்
"மெகாவாட்" (megawatt) அளவிலான மின் உற்பத்தி என்ற இலக்கை கடந்து 3000
"கிகாவாட்" (gigawatt ) அளவுக்கு மின் உற்பத்தியில் சாதனை படைக்கும்
என்றார் அவர்.
மேலும், உள் நாட்டு கார் உற்பத்தியில் சாதனை
படைக்கும் வகையில் வரும் 2015 முதல், ஆண்டுக்கு 50 லட்சம் கார்கள்
உற்பத்தியாகும் என்ற தகவலையும் வெளியிட்டார், ஈரான் அதிபர்.
மார்ச் 2015ல் சந்தைக்கு வரும் மேற்படி கார்களின் விலை 10,000 முதல் 12,000 டாலர் வரை இருக்கும் எனவும் தெரிகிறது.
அமெரிக்க உள்ளிட்ட ஆதிக்க சக்திகளின் கடும் பொருளாதார தடைகளையும் கடந்து ஈரான் பேரரசு, பல்வேறு முன்னேற்றப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.
வடக்கு ஈரானின் "மஷ்அதுல் முகத்தஸ்" நகரிலிருந்து 69 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள "அர்தாக்" அணையை புதன்கிழமையன்று (03/04) துவக்கி வைத்து பேசிய ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதி நிஜாத், தடைகளை கடந்து முன்னேற்றப்பாதையில் ஈரான் பயணித்துக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
அதையடுத்து, உலகின் மிக உயரமான (325 மீட்டர்) காங்கிரீட் அணைக்கட்டும் பணிகளையும் துவக்கி வைத்தார்,அஹ்மதி நிஜாத்.
Hydroelectric power தொழில் நுட்பத்துடன் கட்டப்படும் இந்த அணையின் மூலம் "மெகாவாட்" (megawatt) அளவிலான மின் உற்பத்தி என்ற இலக்கை கடந்து 3000 "கிகாவாட்" (gigawatt ) அளவுக்கு மின் உற்பத்தியில் சாதனை படைக்கும் என்றார் அவர்.
மேலும், உள் நாட்டு கார் உற்பத்தியில் சாதனை படைக்கும் வகையில் வரும் 2015 முதல், ஆண்டுக்கு 50 லட்சம் கார்கள் உற்பத்தியாகும் என்ற தகவலையும் வெளியிட்டார், ஈரான் அதிபர்.
மார்ச் 2015ல் சந்தைக்கு வரும் மேற்படி கார்களின் விலை 10,000 முதல் 12,000 டாலர் வரை இருக்கும் எனவும் தெரிகிறது.
No comments:
Post a Comment