Friday, April 5

உலகில் பெரும்பான்மையான மக்களால் பின்பற்றப்படும் மார்க்கம் இஸ்லாம்



கிறிஸ்த்தவர்களின் தலைமை பீடமான வாட்டிகனிலிருந்து வரும் பிரபல நாளேடு 'லோசேர் வேடோர் ரோம்மானோ:

உலகத்தில் அதிக மக்களால் பின்பற்றப்படக்கூடிய ஒரே மார்க்கம் இஸ்லாம் தான் என்றும், உலக கிறிஸ்த்தவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம் என்பதையும் அந்த நாளேடு நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன,

கிறிஸ்த்தவர்களின் தலைமை பீடமான வாட்டிகனிலிருந்து வெளிவரும் லோசேர் வேடோர் ரோம்மானோ (L'osservatore Romano) என்ற பிரபல பத்திரிகை வெளியிட்டுள்ள ஒரு கருத்துக் கணிப்பில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கமாக இஸ்லாமே திகழ்கிறது என்றும், உலக மக்கள் தொகையில் 4ல் ஒருவர் முஸ்லிமாக வாழ்வதோடு, விகிதாசாரத்தின் அடிப்படையில் 28 சதவீதம் முஸ்லிம்களும் 24 சதவீதம் கிறிஸ்த்தவர்களும் காணப்படுவதுடன் மொத்த மக்கள் தொகையில் 130 கோடிப் பேர் முஸ்லிம்கள் என்றும் 112 கோடிப் பேர்தான் கிறிஸ்த்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது,

மேற்கண்ட பத்திரிகையின் கருத்துக்கணிப்பு முடிவுகளை தான் மறுக்க வழியில்லாமல், வேறு வழியின்றி போப் ஆண்டவரும் ஒப்புக்கொண்டுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

அல்ஹம்துலில்லாஹ்...............!!
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே..............!!

No comments:

Post a Comment