இனவாதிகளால் முகநூலில் நடாத்தப்பட்டு வந்த Sorry.com என்ற முகநூல் பக்கம் இன்று காலை
முதல் முடக்கப் பட்டுள்ளதாக தெரியவருகிறது.
முஸ்லிம்களை
பற்றி தரக்குறைவாகவும், பொய்க்
குற்றச்சாட்டுகளையும், போலி பிரச்சாரங்களையும் தொடர்ந்து
பிரசுரித்தும், இனங்களுக்கு
இடையில் பிளவுகளையும்
ஏற்படுத்தி,
இஸ்லாமிய மற்றும் பல அந்நிய
மத முகநூல் பாவனையாளர்களின் வெறுப்பை பெற்றிருந்த இந்த முகநூல் பக்கம்
நேற்று மாலை வரை இயங்கி வந்ததாக எமது வாசகர்கள் கருத்து தெரிவிக்கும் அதேவேளை, இன்று காலை முதல் இணைய முகவரியில் இருந்து
நீக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
பலருக்கு
சங்கடம் கொடுத்து வந்த இந்த முகநூல் பக்கம் நிரந்தரமாக Facebook நிர்வாகத்தால் முடக்கப்பட்டால் இது
முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றியே. ஏனெனில் இந்த பக்கம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே அனைத்து இலங்கை இஸ்லாமிய
முகநூல் பவனையாளர்களும் ஒன்றிணைந்தது, கூட்டாக இந்த பக்கத்தை நீக்க Facebook நிர்வாகத்துக்கு முறைப்பாடு செய்து
வந்தது குறிப்பிடத்தக்கது.
அல்ஹம்துலில்லாஹ்.
தற்போது இந்த செய்தி பிரசுரிக்கும் நேரம் வரை முடக்கபட்டுள்ள Sorry .com முநூல் பக்கம் நிரந்தரமாக
முடக்கப்பட எல்லாம் வல்ல இறைவன் எமது ஒற்றுமைக்கு உதவி செய்ய துஆ செய்வோம்.
No comments:
Post a Comment