Saturday, March 23

ஜெனிவா தீர்மானம் தொடர்பில் இலங்கைக்கு 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை காலஅவகாசம்

ஜெனிவா தீர்மானம் தொடர்பில் இலங்கைக்கு 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை காலஅவகாசம் :


இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
 
இலங்கை இந்த யோசனை தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுத்ததா என்பதை விசாரணை செய்யும் வகையில் அடுத்த வருடம் விசேட கூட்டம் ஒன்றை மனித உரிமை பேரவை நடத்த உள்ளது.
 
மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் நாடு ஒன்றுக்காக நடத்தப்படும் முதலாவது கூட்டம் இதுவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
வடக்கில் உள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குதல், அதிகாரத்தை பரவலாக்குதல் உள்ளிட்ட நாட்டின் தேசிய பாதுகாப்பு போன்ற அரசியல் குறித்தான விடயங்களை நிறைவேற்ற வேண்டும் என யோசனையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த யோசனையை இலங்கை ஏற்றுக் கொள்ள போவதில்லை என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில், நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான எந்த பரிந்துரைகளையும் நிறைவேற்ற போவதில்லை என அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.  மேற்படி யோசனையை உருவாக்க 26 அரசசார்பற்ற நிறுவனங்கள் அமெரிக்காவிடம் கருத்துக்களை முன்வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது என திவயின தெரிவித்துள்ளது.
 
அதேவேளை இந்தியாவினால், அமெரிக்காவின் யோசனை தொடர்பில் முன்வைக்கப்பட்ட 07 திருத்தங்களையும் அமெரிக்கா நிராகரித்துள்ளது. இந்த திருத்தங்கள் தமிழகத்தில் உள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டது என திவயின கூறியுள்ளது.

No comments:

Post a Comment