Friday, March 15

மகாநாயக்க தேரர்கள் – உலமா சபை சந்திப்பு: பொது பலசேனாவுடன் பேச்சு


ACJUஹலால் விவகாரம் குறித்து இணக்கப்பாடொன்றினை எட்டுவதற்கான முஸ்தீபுகள் அரச, எதிர்கட்சி பிரமுகர்களால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நம்பகத்தகுந்த வட்டாரங்களிலிருந்து  தெரிய வந்துள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் மற்றும் எதிர்க்கட்சி பிரமுகர்களின் அனுசரணையில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் முக்கிய பிரமுகர்கள் ஓரிரு தினங்களுக்குள் மகாநாயக்க தேரர்களையும் அதன் பொதுபல சேனாவின் பிரதிநிதிகளையும் நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடல்களை நடாத்தவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்களில் ஒருவர் நவமணிக்குத் தெரிவித்தார்.
ஹலால் விவகாரம் பூதாகாரமாக மாறியுள்ளதால் இரண்டு சமூகங்களுக்குமிடையே மோதல்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் அரச எதிர்க்கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் இரு தரப்புக்குமிடையே பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதுடன் இந்த விவகாரத்துக்குள் ஹலால் பிரச்சினைக்கு உறுதியான தீர்வொன்று எட்டப்படலாமென்றும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment