Friday, March 15

'ஹறாமை தடுத்து ஹலாலை ஏவுவோம்': மட்டக்களப்பில் சுவரொட்டிகள்

மட்டக்களப்பின் பல இடங்களில் ஈமானிய நெஞ்சமுள்ள இளைஞர் இயக்கம் என்ற பெயரில், 'ஹறாமை தடுத்து ஹலாலை ஏவுவோம்", பௌத்த பிக்குகள் ஹலால் சான்றிதலை நிறுத்தினார்கள் நாம் முஸ்லிம்கள் ஹறாமை நிறுத்துவோம்" என்ற தலைப்புகளில் பல சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி பாலமுனை பிரதேசத்தில் முஸ்லிம்கள் அதிகமாக நடமாடும் பள்ளிவாயல், பாடசாலை, பஸ் தரிப்பிடம், வர்த்தக ஸ்தபானங்கள் ஆகியவற்றில் இச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அச்சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,



சுவரொட்டி-1
'பௌத்த பிக்குகள் ஹலால் சான்றிதலை நிறுத்தினார்கள் நாம் முஸ்லிம்கள் ஹறாமை நிறுத்துவோம்".

குறிப்பு-புகைத்தல்,மது பானம் பாவிப்பதை தடை செய்தல் (இவை முக்கியம்)
ஈமானிய நெஞ்சமுள்ள இளைஞர் இயக்கம் அல்ஹம்துலில்லாஹ்.

சுவரொட்டி-2
ஹறாமை தடுத்து ஹலாலை ஏவுவோம்
கடைகளில் புகைத்தல் பொருட்கள் விற்பதை
தடை செய்யுங்கள்.

அல்லாஹ் உங்களுக்கு (பறக்கத்)அருள் புரிவானாக.
ஈமானிய நெஞ்சமுள்ள இளைஞர் இயக்கம் அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment