Friday, March 15

கொம்பனித்தெரு மக்களை விரட்டியடிக்க மாட்டோம்

5கொழும்பு கொம்பனித்தெரு மக்கள் விரட்டியடிக்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமல் பெரேரா தெரிவித்துள்ளார்.எப்பல்வத்தை மக்களுக்கு மாடி வீட்டுத் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதால் சிறிது காலம் மாத்திரம் அவர்கள் அங்கிருந்து அகற்றப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
கொம்பனித்தெரு மக்கள் விரட்டப்படுவதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் கருத்து வெளியிட்டிருந்ததாக அவர் கூறினார்.எப்பல்வத்தை பகுதியில் 568 வீடுகள் இருப்பதாகவும் அவர்களுக்கு மாடி வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் எனவும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கொழும்பில் (15) இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
எப்பல்வத்தை மக்களுக்கு புதிய வீடு கட்டிக் கொடுத்ததும் தமது வாக்கு வங்கி இல்லாது போகும் என்ற பயத்தில் எதிர்கட்சித் தலைவர் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். -அத தெரண

No comments:

Post a Comment