Thursday, March 7

மருதானையில் முஸ்லிம் கடை மீது தாக்குதல்

பணி நீக்கம் செய்த கடை முதலாளி மீதுள்ள கோபத்தால் தெமடகொட மினன் பள்ளிவாசல் அருகில் அமைந்திருக்கும் சாப்பாட்டுக்கடை ஒன்று மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதி தற்போது இராணுவம் மற்றும் பொலிஸ் பாதுகாப்புக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
சம்பவம் பற்றி அறிய வருவதாவது, கடையில் பணி புரிந்தவர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தன் நண்பர்கள் சுமார் 30 பேருடன் வந்து வியாபார நிறுவனத்தைத் தாக்கியுள்ளதாகவும் இதன் விளைவாக மூவர் வெட்டுக்காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் சம்பவ இடம் தற்போது பொலிஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.
சம்பவத்தில் பிரதேசத்தின் தமிழ் , சிங்கள இளைஞர்களும் தொடர்பு பட்டிருப்பினும் இது முஸ்லிம்கள் மீது திருப்பப்படக்கூடாது எனும் அச்சம் பிரதேச வாசிகள் மத்தியில் நிலவுவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment