ஹலால் சான்றிதழ் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு தீர்வு காணும்
நோக்கில் எட்டப்பட்டுள்ள இந்தத் தீர்மாமானது முழு நாட்டுக்கும் கிடைத்த
வெற்றியாகும் என பெல்லன்வில விமலரத்ன தேரர் தெரிவித்தார்.
இந்தத் தீர்மானமானது எமக்கோ உலமா சபைக்கோ கிடைத்த வெற்றி அல்ல. மாறாக
முழு நாட்டுக்கும் கிடைத்த வெற்றியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஹலால் தொடர்பில் முக்கிய தீர்மானங்களை
அறிவிக்கும் பத்திரிகையாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஹலால் முஸ்லிம்களின் உரிமையாகும். நாம் அதனை மதிக்கிறோம். அதேநேரம் இது
ஒரு பெளத்த நாடு. இந்த நாட்டில் வாழும் பெரும்பான்மையான மக்கள் நாம் ஏன்
ஹலால் உண்ண வேண்டும் எனக் கேட்கிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பில் நாம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுடன் பல
தடவைகள் பேச்சு நடத்தினோம். உலமா சபையினர் எமது நண்பர்கள். நாம்
தொடர்ந்தும் சிநேகபூர்வமான முறையில் விடயங்களைக் கையாளுவோம் என்றும் அவர்
இங்கு மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment