Monday, March 11

உள்நாட்டில் விற்பனையாகும் உற்பத்திகளுக்கு ஹலால் இலச்சினை பொறிக்கப்படமாட்டாது


halaalஉள்நாட்டு சந்ததையில் விற்பனையாகும் உற்பத்திகளுக்கு  ஹலால்  இலச்சினை பொறிக்கப்படமாட்டாது. வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும்  உற்பத்திகளுக்கு மாத்திரமே ஹலால் சான்றிதழ் பொறிக்கப்படும், வெளிநாட்டு ஏற்றுமதிப் பொருட்களுக்கு சான்றிதழ் வழங்கும் செயற்பாட்டுக்கு கட்டணம் அறவிடப்படமாட்டாது.
மேலும் வெளிநாடுகளில் தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவோர் வேண்டுகோள்விடுக்கும்பட்‌சத்தில் மாத்திரம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழமைபோன்று ஹலால் சான்றிதழை வழங்கும் என     தற்போது கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அறிவிக்கபட்டுள்ளது.
இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதிகள், மகா சங்க தலைமை பிக்குகள் மற்றும் வர்த்தக சம்மேளன ,chamber of commerce sri lanka  பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலதிக விபரங்கள் பின்னர் பதிவு செய்யப்படும்

No comments:

Post a Comment