பொது பல சேனாவிவினால் அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புக்களாக
பெயரிடப்பட்டுள்ள 10 முஸ்லிம் அமைப்புக்களின் தலைவர்களையும் பாதுகாப்பு
செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சந்திக்கவுள்ளார்.
நாளைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு குறித்த சந்திப்பு பாதுகாப்பு செயலாளரின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மைக்காலமாக நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக சில விரும்பத்தகாத நடவடிக்கைகள் இடம் பெற்று வரும் நிலையிலேயே இச்சந்திப்பு இடம் பெறவுள்ளது.
முன்னதாக குறித்த 10 இஸ்லாமிய அமைப்புக்களும் இலங்கையில் அடிப்படைவாதத்தை வளர்ப்பதாக பொது பல சேனா குற்றம் சாட்டியிருந்த்ததுடன் அவ்வமைப்புக்களுக்கு சவூதி உள்ளிட்ட அரபு நாடுகளிலிருந்து நிதியுதவி அளிக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment