Wednesday, March 6

நோன்பு நோற்று பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு ஜம்இய்யத்துல் உலமா கோரிக்கை

நோன்பு நோற்று பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் வேண்டிக் கொள்கிறது.

சகல இனங்களும் ஐக்கியத்தோடும் புரிந்துணர்வோடும் வாழவதற்காகவே நோன்பு நோற்று பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டியுள்ளது.

இதனால் வியாழன், வெள்ளி மற்றும் திங்கள் ஆகிய நோன்பு நோற்று பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம்கள் அனைவரையும் வேண்டியுள்ளது.

இது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷெய்க் ஏம்.எம்.ஏ. முபாரக் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"அண்மைக் காலமாக நாட்டில் ஏற்பட்டு வருகின்ற அசாதாரண நிலைமைகள் காரணமாக முஸ்லிம்கள் மத்தியில் பீதியும் அச்சமும் அதிகரித்து வருகின்றது.

முஸ்லிம்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையிலான நூற்றாண்டு கால ஐக்கியம், புரிந்துணர்வு மற்றும் சகவாழ்வு என்பவற்றிற்கு இவை அச்சுறுத்தலாகவும், சவாலாகவும் மாறிவிடுமோ என்றும் அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலைமைகள் அனைத்துத் தரப்பினரது கவனத்திற்;கும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலைமைகள் மாற்றமடைந்து அனைவருக்கும் பாதுகாப்பான சூழல் உருவாகி, இனங்கள் மத்தியில் புரிந்துணர்வும், ஒற்றுமையும் தொடர்ந்து ஏற்பட பிரார்த்தனை செய்யவும்.

மேலும், வியாழன், வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் நோன்பு நோற்று பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம்கள் அனைவரையும் வேண்டிக்கொள்கிறது. இது தொடர்பான அறிவித்தல் நாடாளவிய ரீதியாக பள்ளிவாசல்களில் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment