Wednesday, March 6

பொதுபல சேனா அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் தலைமறைவு?





பொதுபல சேனா அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர்  தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரேஷ்ட பௌத்த பிக்கு ஒருவரே இவ்வாறு தலைமறைவாகியுள்ளதாக குறித்த தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
குறித்த பிக்குவின் பெயர் விபரங்கள் எதுவும் வெளியிடப்படாத போதும்  பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்படக் கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவே குறித்த சிரேஷ்ட உறுப்பினர்  இவ்வாறு தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


முஸ்லிம் அமைப்பொன்று செய்த  முறைப்பாட்டுக்கு அமைய குறித்த பொதுபல சேனா அமைப்பின் பௌத்த பிக்குவை கைது செய்ய காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கத்தயாராக இருந்த நிலையிலேயே அவர் தலைமறைவாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் பூர்த்தியாகும் வரையில் குறித்த சில  பொதுபல சேனா செயற்பாட்டாளர்களை கைது செய்து தடுத்து வைத்திருக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் இதன் அடிப்படையிலேயே குறித்த தேரர் கைது செய்யப்பட இருந்ததாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த செய்தி தொடர்பில் விடிவெள்ளி பொது பல சேனாவின் தலைவர் கிரமவிமலஜோதி தேரரை தொடர்பு கொண்டு வினவியது.  இதன்போது கருத்து தெரிவித்த அவர் பொது பல சேனா அமைப்பு குறித்து ஒவ்வொரு இணையத்தளத்திலும் பல்வேறு வகையான செய்திகள் வெளியிடப்படுவதாகவும் குறித்த செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லை எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment