புனித மக்கா பெரிய பள்ளிவாசலின்
கூரையில் சிறிய விமான இறங்கு தளம் அமைக்கப்படவுள்ளது. ரமழான் மற்றும்
ஹஜ் காலப் பகுதியில் வாகன நெரிசல்களை தவிர்த்து நோயாளிகளை அழைத்துச் செல்ல
உதவியாகவே இந்த விமானத் தளம் அமைக்கப்படவுள்ளது.
இரு புனித பள்ளிவாசல்களையும்
விரிவுபடுத்தும் மன்னர் அப்துல்லாஹ்வின் திட்டத்தின் கீழ் இந்த சிறு விமானத் தளம்
அமைக்கப்படவுள்ளது.
புனித பள்ளிவாசல் விரிவுபடுத்தும்
திட்டத்தின் கீழ் புதிய கழிவறைகள் அமைக்கப்படவுள்ளதோடு பாதசாரிகளில்
இருந்து தவிர்த்து வாகனங்களுக்கான பாதை கட்டமைப்பொன்றும் அமைக்கப்படவுள்ளது.
இதில் அனைத்து பாதுகாப்புடன் கூடிய பாதசாரிகளுக்கான சுரங்கப்பாதையும்
அமைக்கப்பட்டுவருகின்றது. இந்த சுரங்க பாதையூடாக வடக்கு மற்றும் தென்பகுதி
முற்றவெளிக்கு இடையில் பயணிக்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த விரிவாக்க திட்டத்தில் குடிநீரை
குளிரூட்டும் முறை மற்றும் கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கான முறை ஆகியவை
உள்ளடக்கப்பட்டுள்ளன. மக்கா புனித பள்ளிவாசலை விரிவுபடுத்தும் பணிகள்
இரண்டு ஆண்டுகளில் முடிவுக்கு கொண்டுவரும் வகையில்
ஆரம்பிக்கப்பட்டதோடு பள்ளிவாசல் புதுப்பிக்கப்பட்ட பின் 1.6 மில்லியனுக்கு
அதிகமானோருக்கு ஒரே நேரத்தில் இடவசதி வழங்கக்கூடியதாக இருக்கும்.
No comments:
Post a Comment