ஹலால் உணவு தயாரிப்பு முறை பற்றி மேலதிக
அறிவையும் ஆராய்வுகளையும் செய்யும் நோக்கில் சவுதி அரேபிய சுகாதார கல்வி
நிறுவனமான தைபா கெயார் நிறுவனத்துடன் மலேசியாவின் Universiti Teknologi
Malaysia எனும் பல்கலைக்கழகம் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளது.
குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானம்
மற்றும் தொழிநுட்பத்துக்கான பிக்ஹ் பிரிவும் குறிப்பிட்ட சவுதி நிறுவனமும்
இத்துறையில் இணைந்து பணியாற்றுவதன் மூலம் ஹலால் மாமிசத் தயாரிப்பு
தொடர்பில் மேலதி அறிவைப் பகிர்ந்து கொள்ளலாம் என பல்கலைகழகத்தின் உப
வேந்தர் கலாநிதி முஹமது அஸ்ராய் காஸிம் கருத்து வெளியிட்டுள்ளார்.
இது போன்று மேலும் பல முஸ்லிம் நாடுகளுடன்
இணைந்து செயற்படும் திட்டமும் எதிர்காலத்தில் இருப்பதாகத் தெரிவித்த அவர்
சுல்தான் இப்ராஹிம் நிலையத்தில் வைத்து இவ்வொப்பந்தத்தில்
கைச்சாத்திட்டதோடு இது இரு தரப்பிற்கும் பயன் தரும் என்றும் நம்பிக்கை
வெளியிட்டுள்ளார்.
- மலேசிய நிருபர்
No comments:
Post a Comment