Wednesday, March 20

முக்காடிட்ட பெண்னை வேலைத் தளத்திலிருந்து நீக்கியமை பாகுபாடானது – பிரான்ஸ் மேல் நீதிமன்றம்


french niqab missfrance-300x200-1தனது வேலைத் தளத்தில் முக்காட்டை நீக்க மறுத்தமைக்காக வேலை நீக்கப்பட்டமை செல்லுபடியற்றது என அவளது மத உரிமையை கருத்தில் கொண்டு பிரான்ஸின் மேல் நீதிமன்றமொன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

முன்னர் முறையீட்டு நீதிமன்றத்தில் குறித்த பெண்ணின் தொழில் வழங்குனர் சார்பாக வழங்கப்பட்ட தீர்பையே மேல் நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது. குறித்த பெண் குழந்தைகள் முன்பள்ளிமொன்றிலே வேலை செய்துள்ளதுடன் 5 வருடங்களின் பின்னர் 2008ம் ஆம் ஆண்டு அவள் வேலையிளிருந்து நீக்கப்பட்ட பின் மீண்டும் வேளைக்கு திரும்பியுள்ளாள்.
பிரான்ஸின் அரச பாடசாலைகளில் எந்த மத ஆடைகளையும் அணிய முடியாது என்று சட்டம் நடைமுறையிலிருந்த போதும் இங்கு அந்த சட்டம் செல்லுபடியாகாது; காரணம் அது ஒர் தனியார் நிறுவனம் என்று நிதிமன்றம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment