Wednesday, March 20

கிறிஸ்தவ தேவாலயத்தில் முஸ்லிம்களுக்கு தொழுகை நடத்த இடவசதி



ஸ்கொட்லாந்தில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் முஸ்லிம்களுக்கு தொழுகை நடத்த இட வசதி வழங்கப்பட்டுள்ளது. பள்ளிவாசலில் அனைவருக்கும் தொழுவதற்கு இட வசதி இல்லாததால் சென் ஜோன்ஸ் தேவாலயத்தின் போதகர் ஐசாக் பூபாலன் அங்கு தொழுவதற்கு இட வசதி அளித்துள்ளார்.

தொழுவது தவறானது அல்ல. இறைவனை தொழுவதை ஊக்குவிப்பதே எனது வேலையாகும்என போதகர் பூபாலன் கூறியுள்ளார்.

ஸ்கொட்லாந்தின் கிரவுன் வீதியில் சென் ஜோன்ஸ் தேவாலயம் 1980 களில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அருகில் 2006ம் ஆண்டு தொழுகை அறையாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் அங்கு பள்ளிவாசல் உருவாகியுள்ளது. 


பள்ளிவாசலில் 70 பேரளவிலேயே தொழ முடியும். ஆனால் 200 க்கும் அதிகமான முஸ்லிம்கள் உள்ளனர். பெரும்பாலானோர் பள்ளிவாசலுக்கு வெளியில் வீதிகளிலேயே தொழுது வருகின்றனர். இது குறித்து போதகர் பூபாலன் கூறும்போது, ‘ஒருநாள் நான் பள்ளிவாசலுக்கு அருகால் போகும் போது 20 அல்லது 30 பேர் வீதியில் தொழுது கொண்டிருந்தார்கள் பனிப்பொழிவில் அவர்கள் வீதியில் அமர்ந்திருந்தார்கள். அந்த குளிரில் அவர்கள் மூச்சுவிடும் சத்தம் கூட கேட்டது. அது எனக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தேவாலயம் அடுத்த பக்கம் இருக்கும் போது இது தவறானது என உணர்ந்தேன். 

இது பெரிய கட்டடம் வெள்ளிக்கிழமை பகல் வேளையில் காலியாகத்தான் இருக்கும். இதுபற்றி நான் தேவாலய மக்களிடம் பேசினேன். அதில் ஒருசிலர் இது எமது பிரச்சினை அல்ல என கூறினார்கள். ஆனால் அதனை என் கண்ணால் பார்த்ததால் அது பிரச்சினையாக உணர்ந்தேன்என்றார்.



ஸ்காட்லாண்டு நாட்டின் அபர்டீன் நகரில் செயின்ட் ஜான் குருபரிபாலன தேவாலயம் இயங்கி வருகிறது. இதனை நிர்வகிப்பவர் ஐசக் பூபாலன் என்ற பாதிரியார் ஆவார்.

இந்தத் தேவாலயம் அருகில் சையித் ஷா முஸ்தபா ஜமி மஸ்ஜித் மசூதி உள்ளது. அங்குள்ள முஸ்லிம் மக்கள் தினமும் 5 வேளையும் இந்த மசூதிக்கு வந்து தொழுவது வழக்கம். இடப் பற்றாக்குறை காரணமாக அவர்களில் பலரும் வீதியில் மண்டியிட்டு அமர்ந்து தொழுகை நடத்தியுள்ளனர். மிகக் குளிரான காலங்களிலும் அவ்வாறே செய்ய முடிந்தது.

இதனைக் கவனித்த பாதிரியார் பூபாலன் அவர்களுக்கு உதவி செய்ய நினைத்தார். முதலில் தயங்கிய திருச்சபை பின்னர் மறுப்பேதும் சொல்லவில்லை. பாதிரியார் முஸ்லிம் பெருமக்களை அழைத்து தங்களது தேவாலயத்தின் உள்ளே தொழுகையை நடத்திக் கொள்ளுமாறு கூறினார். தேவாலயத்தின் பிரார்த்தனைக் கூடத்தின் ஒரு பகுதியை முஸ்லிம் மதகுருவான அஹமத் மெகர்பி வசம் ஒப்படைத்தார். அதனை ஏற்றுக்கொண்ட அம்மக்களும் அங்கேயே தொடர்ந்து தொழுகை செய்ய ஆரம்பித்தனர். இதன்மூலம் முதன்முதலாக முஸ்லிம் மக்களுக்காக திறந்த தேவாலயம் என்ற பெருமையை இந்தத் தேவாலயம் பெற்றுள்ளது.

இந்த உதவியை செய்யாவிட்டால் நான் என்னுடைய மதத்திற்கு உண்மையுள்ளவனாக இருக்கமாட்டேன் என்று பாதிரியார் பூபாலன் கூறுகிறார். 

No comments:

Post a Comment