Wednesday, March 20

புத்த துறவிகளை எச்சரிக்கை விடுக்கவே சென்றோம்.ஆனால், அவர்கள் பேசிய விதம் எங்களை எரிச்சல் படுத்தியது..


இலங்கை கண்டியை சேர்ந்த பெளத்த பிக்கு ஒருவர் சென்னையில் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டியைச் சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் உட்பட 19 பேர் டில்லிலிருந்து, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், நேற்று முன்தினம் காலை சென்னை மத்திய ரயில் நிலையம் வந்தபோது, அவர்களை 3 இனந்தெரியாத நபர்கள் தாக்கிவிட்டு தப்பினர்.
இதுகுறித்து மத்திய ரயில்வே பொலிஸர் விசாரித்து சென்னை அகரம் மஞ்சில் தோட்டம் சரவணபிரகாஷ் 29, கொத்தவால் சாவடி, ஆசாரிப்பள்ளம் பிரபாகரன் 24, திருவல்லிக்கேணி கஜபதி முதல் தெருவை சேர்ந்த சீனிவாசன் 30, ஆகிய மூவரை கைது செய்தனர்.
 
கைதானவர்கள் பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், புத்த துறவி வருவதாக அதே ரயிலில் பயணம் செய்தவர்கள் மூலமாக எங்களுக்கு தகவல் வந்தது. புத்த துறவிகளை எச்சரிக்கை விடுக்கவே சென்றோம்.
ஆனால், அவர்கள் பேசிய விதம் எங்களை எரிச்சல் ஏற்படுத்தும் வகையில் இருந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை தாக்கினோம். அவர்களிடம் இருந்து நாங்கள் பணம் எதுவும் எடுக்கவில்லை என்று தெரிவித்தனர்.
இது தொடர்பாக சென்ட்ரல் ரயில்வே டிஎஸ்பி பொன்ராம், பொலிஸ் அதிகாரி சேகர் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேவேளை தாக்குதலுக்கு இலக்கான பௌத்த பிக்கு நேற்று நாடு திரும்பியுள்ளார்.

No comments:

Post a Comment