அமைச்சராக
பதவியேற்று நாட்கள் கடந்துள்ள நிலையிலும் உற்பத்தி மற்றும் உற்பத்தி
திறன் அபிவிருத்தி அமைச்சராக பஷீர் சேகுதாவூத் இதுவரை தமது கடமைகளை
உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவில்லை.
கடந்த
ஜனவரி மாதம் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின்போதே அவர் அமைச்சராக
நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள்
கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன.
இந்த
நிலையில் பஷீர் சேகுதாவூத் அமைச்சராக பதவியேற்று சுமார் 50 நாட்கள்
கடந்துள்ள நிலையில், இதுவரை உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்கவில்லை.
எனினும் அமைச்சு இடமாற்றப்படுள்ளமையினாலேயே அமைச்சின் கடமைகளை
பொறுப்பேற்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பஷீர் சேகுதாவூத்தின்
நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
அத்துடன்,
தற்போது உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் அபிவிருத்தி அமைச்சு புதிய
இடமொன்றுக்கு மாற்றப்பட்டுள்ளமையினால் அதன் நிர்மாண பணிகள் காரணமாகவே இந்த
கால தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும்
மிக விரைவில் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக
பொறுப்பேற்பார் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னர்
கொழும்பிலிருந்த இந்த அமைச்சு தற்போது பத்தரமுல்லைவிற்கு
இடமாற்றப்பட்டுள்ளது.
இதேவேளை,
முன்னர் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் அபிவிருத்தி அமைச்சு செயற்றபட்ட
இடத்தில் தற்போது சீனிக் கைத்தொழில் அமைச்சு செயற்படுகின்றமை
குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment