Wednesday, March 20

வெளிநாட்டவருக்கு பிரத்தியேகமாக நடத்தப்பட்ட பாலியல் சேவை நிலையம் சுற்றி வளைப்பு



புத்தளம் மாவட்டம் நாத்தாண்டிய பிரதேசத்தில் வெளிநாட்டுப் பிரஜைகளுக்காக பிரத்தியேகமாக நடத்தப்பட்ட பாலியல் சேவை நிலையம் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இந்த ஹோட்டலை ஜெர்மனியர் ஒருவரே நடாத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தொலைக்காட்சி நடிகைகள் மற்றும் சினிமா நடிகைகள் என்ற போர்வையில் பெருந்தொகைப் பணத்திற்கு யுவதிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளனர்.

நீச்சல் தடாகம் உள்ளிட்ட சொகுசு வசதிகளுடன் கூடிய அறைகளில் வெளிநாட்டவர்களுக்கு இந்த பாலியல் சேவை வழங்கப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆடைக் கைத்தொழிற்சாலைகளில் கடமையாற்றிய பெண்களை, தொலைக்காட்சி நடிகைகள் என ஏமாற்றி வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.


2000 ரூபா முதல் 50, 000 ரூபா வரையில் பணம் அறவீடு செய்யப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் இராணுவ அதிகாரியைப் போன்று வேடமிட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மூன்று பெண்களை விலைக்கு வாங்குவதற்காக முற்பணம் செலுத்தி, இந்த சட்டவிரோத நடவடிக்கையை கையும் களவுமாக பிடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாலியல் தொழிலில் ஈடுபட்ட மூன்று பெண்களும், அவர்களை அழைத்துச் சென்ற சாரதியும், ஹோட்டல் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த ஆடைக் கைத்தொழிற்சாலைகளில் கடமையாற்றி வருவதாகவும் பகுதி நேரமாக பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.


No comments:

Post a Comment