Friday, March 29

பெஷன்பக் மீது தாக்குதல் - இருவர் கைது



  பெப்பிலியானவில் உள்ள பெஷன்பக் வர்த்தக நிலையம் மீது குண்டர்கள் தரப்பினரால் நேற்று இரவு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தின் போது மூன்று பேர் காயமடைந்தனர். 
இது தவிர, இந்த சம்பவம் தொடர்பான செய்திகளை சேகரிக்க சென்ற ஹிரு எப்.எம். இன் பிரதேச செய்தியாளர் குழப்ப நிலையானவர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் காயமடைந்துள்ளார்.
இதேவேளை, பெப்பிலியான வர்த்தக கட்டடம் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment