2013. 03. 28 இரவு பெபெளியான பெஷன் பக்
சம்பவ இடத்திற்கு அருகிலிருந்து நீதியமைச்சர் ஹகீம் அவர்களை நேரடியாக
தொடர்புகொண்டு விடயம் சம்பந்தமாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி
வினவப்பட்டபோது ‘நிச்சயமாக அரசாங்கம் இதுவிடயமாக உச்சகட்ட நடவடிக்கைகளை
எடுக்கவேண்டும் நீதியமைச்சர் என்ற வகையில் தானும் இதுபற்றி உரியவர்களுக்கு
எடுத்துகூறி சட்டத்தை கையிலெடுத்து வன்செயல்களில் ஈடுபட்ட காடையர்களை
கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன்’ என்றும் தெரிவித்தார் .
கடந்த
2013.03.18 ந் திகதி கண்டி பொது பல சேனா பொது கூட்டத்தில் கல பட அத்தே ஞான
சார தேரோ உரையாற்றும் போது ‘இந்த பேஷன் பக் கடைகளில் தான் சிங்கள யுவதிகளை
வைத்து அந்தப்புரங்களை நடாத்துகிறார்கள் . இதில் தான் சிங்கள யுவதிகள்
திட்டமிட்டு இஸ்லாத்திற்கு மதம் மாற்றுகிறார்கள் .நான் இவற்றை சொல்வதால்
பேஷன் பக் கடைகளை கற்களால் அடித்து நொறுக்கி விட வேண்டாம்’ என்று சிலேடையாக
பெஷன் பக் நிறுவனங்கள் தாக்கப்பட வேண்டும் என்று கருத்துரைத்த நிகழ்வை
அமைச்சரிடம் எடுத்துகூறி இது விடயமாக அமைச்சர் ஹக்கீமின் கருத்தை
வினவியபோது இது விடயமாகவும் தாம் அவதானம் செலுத்தியுள்ளதாகவும்
தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு செயலாளர்
வரவிருப்பதாகவும் விடயங்களை அவரின் நேரடி அவதானதிற்கு கொண்டுவர ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளாதாகவும் அங்குள்ளவர்களால் கூறப்பட்டாலும் சற்று
நேரத்திற்கு பின்பு சம்பவ இடத்திற்கு சுமார் 5௦௦ மீட்டர் அருகிலுள்ள பௌத்த
விகாரைக்கு பாது காப்பு செயலாளர் வந்து சென்றுள்ளதாகவும் குறிப்பிட்ட
பௌத்த விகாரையில் இருந்தே இத்தாக்கு தலுக்கு ஆள் திரட்டப்பட்டுள்ளதாகவும்
அங்கிருந்தவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது, எனினும் பாதுகாப்பு செயலாளரின்
வருகையை உறுதிப்படுத்த முடியவில்லை.
No comments:
Post a Comment