திக்வல்லையில்
மஃரிப் தொழுகைக்காக சென்ற நபர் ஒருவர் கடந்த புதன் (27) அன்று முச்சக்கர
வண்டியில் வந்த இனவாதிகளால் தாக்கப்பட்டுள்ளனார்.
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,
திக்வல்லையைச் சேர்ந்தவரும் தங்கல்லை பிரதேச செயலகத்தில் பணியாற்றுபவருமான
எம்.இன்சாப் (47) என்பவர் வீட்டிலிருந்து மஃரிப் தொழுகைக்காக பள்ளிவாசல்
நோக்கிச் சென்ற போது இலக்கத்தகடற்ற முச்சக்கர வண்டியில் வந்த பெரும்பான்மை
இனத்தைச் சேர்ந்தவர்கள் இவரைத் தாக்கியுள்ளதாகத் தெரியவருகின்றது.
தாக்குதலுக்கான
காரணம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளிவராத நிலையில், திக்வல்லை
பொலிஸார் இதுகுறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், குறித்த நபர்
வீட்டில் சிகிச்சை பெற்றும் வருகிறார்.
No comments:
Post a Comment