|
|||||||||||||||||||||||||||||
நேற்றைய தினம் பாடசாலையில், இன்றிலிருந்து ஆசிரியர்களை வணங்குமாறு அதிபரால் பணிக்கப்பட்டதாக முஸ்லிம் மாணவர்கள் பெற்றோரிடம் புகார் தெரிவித்திருந்தனர். எனினும் பாடசாலையின் அதிபர் குறித்த குற்றச்சாட்டை மறுத்திருந்த நிலையில் இன்றைய தினம் பாடசாலை நடவடிக்கையை தொடர்ந்து மேலதிக நடவடிக்கை குறித்து சிந்திப்பதாக பள்ளிவாசல் நிர்வாக சபை தெரிவித்தது. இந்நிலையில் இன்றைய தினம் பாடசாலையில் முஸ்லிம் மாணவர்கள் தமது சமயத்தின் பிரகாரம் காலை ஆராதனை நிகழ்ச்சிகளை தொடர பூரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இந்நிலையில் குறித்த பாடசாலையில் முஸ்லிம் மாணவர்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என நிர்வாக சபை தலைவர் விடிவெள்ளியிடம் தெரிவித்தார். |
Wednesday, March 6
பாணந்துறை பாடசாலை விவகாரம்: பிரச்சினை எதுவும் இல்லை : நிர்வாக சபை
Labels:
இலங்கை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment