கண்டி மீவதுரே பிரதேசத்தில் நடாத்திச் சென்ற விடுதியொன்றை முற்றுகையிட்ட
பொது பல சேனாவின் கண்டி மாவட்ட பிக்குவும் தேரர் குழுவும், விடுதியின்
கேரேஜ் சுவரில் ஒட்டப்பட்டிருந்த தலதா மாளிகையின் பெரிய அளவிளான புகைப்படம்
ஒன்றை உடன் அகற்றுமாறு பலவந்தப்படுத்திய சந்தர்ப்பத்தில் பேராதெனிய பொலிஸ்
அதிகாரிகள் சிலர் அங்கு வந்து நிகழ்வை சமாதானப்படுத்தினர். அத்தோடு, தலதா
மாளிகையின் புகைப்படத்தை கழற்றி பொலிஸார் தம் வசப்படுத்திக் கொண்டனர்.
ஸ்ரீ தலதா மாளிகையின் புகைப்படம் ஒன்றை கேரேஜ் சுவரில் ஒட்டியதன் மூலம்
தலதா மாளிகைக்கு அவமானம் ஏற்படும் வகையில் செயற்பட்டுள்ளதாக அவ் விடுதியை
நடாத்திச் சென்ற முஸ்லிம்கள் இருவருக்கும் எதிராக குற்றவியல் வழக்கு மசோதா
இலக்கம் 291 (அ) உறுப்புரைக்கு கீழ் வழக்குத் தாக்கல் செய்வதாகவும்
பொலிஸார் தெரிவித்தனர்.
ஸ்ரீ தலதா மாளிகையின் புகைப்படம் ஒன்றை கேரேஜ் சுவரில் ஒட்டியது தலதா
மாளிகைக்கு ஏற்படுத்திய அவமானம் எனக் கூறி பொது பல சேனாவின் பிக்கு
முறைப்பாடு செய்ததாகவும் அதன்படி விசாரணை மேற்கொண்டதாகவும் பொலிஸார்
கூறினர்.JM
No comments:
Post a Comment