ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை மகாநாட்டில் இலங்கை
முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளை
சமர்ப்பிப்பதற்கு சில தமிழ் குழுக்கள் நடவடிக்கை எடுத்திருப்பதாக ஜெனீவா செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விடயத்தில் முஸ்லிம் இயக்கங்கள் மௌனம் சாதித்தாலும்
தமிழ்பேசும் சமூகம் என்ற வகையில் முஸ்லிம்கள் கடந்த சில மாதங்களாக
எதிர்நோக்கிவரும் அச்சுறுத்தல்களை மனித உரிமை ஆணைக்குழுவின் அவதானத்துக்குக்
கொண்டுவர தமிழ் குழுக்கள் தீர்மானித்திருப்பதாக ஜெனீவா செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேநேரம், ஜெனீவா மகாநாட்டில் நல்லிணக்க ஆணைக்குழுவின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காக
மேலும் ஒரு வருடகால அவகாசத்தை அளிக்கலாம் என அமெரிக்கத் தரப்பு தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment