Thursday, February 28

ஹலால் சர்ச்சை முஸ்லிம் நாடுகளின் உறவை சீர்குலைக்கும்:அலவி






ஹலாலை ஒரு பிரச்சினையாக ஏற்படுத்துவதானது சர்வதேச வர்த்தகத்தை பாதிப்படையச் செய்யும் எனவும்  இது முஸ்லிம் நாடுகளுடனான இலங்கையின் உறவை சீர்குலையச் செய்வதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சதியே என மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா விடிவெள்ளிக்கு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தீவிரவாத போக்குள்ள மூன்றாம் தரப்பினரே இவ்வாறான தேவையில்லாத விடயங்களை பிரச்சினையாக உருவாக்கியுள்ளனர்.

ஹலால் ஒரு பிரச்சினையே கிடையாது. எமது முன்னோர்கள் இவ்வாறு ஹலால் தொடர்பில் இலட்சினைகளையோ சான்றிதழ்களையோ வைத்திருக்கவில்லை. அவர்களுக்கு ஹலால் எது? ஹராம் எது? என்பது நன்றாகவே தெரியும். அவர்கள் ஹலாலான உணவுகளையே உட்கொண்டனர். தற்போது முஸ்லிம்கள் ஹலாலான உணவுகளையே பெற்றுக்கொள்கின்றனர்.

தீவிரவாதப் போக்குடையவர்கள் எதையாவது பிரச்சினையாக ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஹலாலை பிரச்சிகையாக மாற்றியுள்ளனர். அவர்கள் நாட்டில் ஏதாவது  பிரச்சினைகள் இருக்க வேண்டும் என்பதற்காக குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment